இன்று அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறையா ?அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம்

உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என பரவிய தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என பரவிய தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால்  சமூக வலைதளங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை விடப்பட்டதாக தகவல்கள் பரவியது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன் கூறுகையில், உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம். இது வெறும் வதந்தி தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.