சென்னை :நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல், சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மாலை 5 மணியளவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இல.கணேசன், உடல்நலக்குறைவால் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80. நாகாலாந்து மாநிலம் அவரது மறைவையொட்டி 7 நாள் துக்கம் அனுசரிக்கிறது.
அவரது உடல், தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், இன்று மாலை 5 மணியளவில் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க முப்படை வீரர்களின் இறுதி மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில்,தமிழ்நாடு கவர்ன ஆர் என் ரவி, மகாராஷ்டிரா கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன், நாகாலாந்துமுதல்வர் நைபியு ரியோ, அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜெகத்ரட்சகன், H.ராஜா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
