அரசு விழா மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம்.!

ஆண்டிபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.

Thanga Tamilselvam MP - Maharajan MLA

சென்னை :தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் தொடக்க விழாவில், திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனுக்கும், திமுக எம்.எல்.ஏ. மகாராஜனுக்கும் இடையே மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வரவேற்பு பேனரில் எம்எல்ஏ மகாராஜனின் போட்டோ இல்லாததால் நிகழ்ச்சி தொடக்கத்திலேயே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், மேடையில், நலத்திட்ட உதவிகள் அடையாள அட்டையை மகாராஜனிடம் இருந்து தங்க தமிழ்செல்வன் பிடுங்கியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதாவது, நலத்திட்ட அட்டைகளை யார் வழங்குவது என்று ஏற்பட்ட வாக்குவாதத்தில், நான் தான் வழங்குவேன் என எம்எல்ஏ மகாராஜன் பிடுங்கியதால் அவருக்கும் எம்பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மேடையிலேயே ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறை மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சமாதானம் செய்தனர்.

இந்த வாக்குவாதம் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி கட்சிகள் வைரலகியதும், இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு, திமுகவின் உட்பூசல்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.