திருவள்ளூர் :திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.66 கோடியே 78 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் இருந்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திட சென்னைக்கு நாளொன்றுக்கு 265 MLD லிட்டர் குடிநீர் விநியோகம் துவக்கி வைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பளித்தனர். இந்தத் திட்டம், தெற்கு சென்னையில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மேம்பட்ட குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும்.
இந்த முயற்சி, சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தின் (CMWSSB) மூலம் செயல்படுத்தப்பட்டு, நகரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நடவடிக்கையாக அமைகிறது.
