நெருங்கும் தேர்தல் முடிவுகள் தேதி...வேட்பாளர்களுடன் விஜய் நாளை ஆலோசனை!

தவெக வேட்பாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

Hero Image

சென்னை : தமிழகத்தில் 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் அந்த நாளை நோக்கி தான் உள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், நாளை (ஏப்ரல் 30, 2026) சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் 1.20 மணியளவில் தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க சார்பில் போட்டியிட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில், தேர்தல் பணிகளின் இறுதிக் கட்ட ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் நாளுக்கான தயாரிப்புகள், வேட்பாளர்களின் பொறுப்புகள் மற்றும் கட்சியின் ஒட்டுமொத்த உத்தி ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனைத்து வேட்பாளர்களும் 17C ஒரிஜினல் படிவத்தை (Form 17C) தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படிவம் வாக்குப்பதிவு முடிவுகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் முக்கிய ஆவணமாகும்.தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது, த.வெ.க-வின் இறுதிக் கட்ட தேர்தல் உத்திகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அமைந்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.