'வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை' தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு – விஜய்.!

சென்னையில் 10 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தார்.

sanitation workers - TVK Vijay‌

சென்னை :தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், பணி நிரந்தரம் கோரியும் 11 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து, கடந்த 11-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் விஜய்யின் இந்த நகர்வு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் முயற்சியாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ”தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள்; தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது.

அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.

தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது” என்று விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

unknown node