ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா?

IPL ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம்

Who has hit the most sixes in IPL matches

IPLஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதிரடியாக இருக்கும். இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களை பற்றி பார்க்கலாம்.

அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள்

கிறிஸ் கெய்ல் – 357

ரோஹித் சர்மா- 257

ஏபி டி வில்லியர்ஸ் – 251

எம்எஸ்தோனி- 239

விராட் கோலி -234

டேவிட் வார்னர் – 226

கிரண் பொல்லார்டு -223

சுரேஷ் ரெய்னா – 203

ஆண்ட்ரே ரஸ்ஸல்- 193

ஷேன் வாட்சன்- 190

READ MORE –ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்!

மேற்கண்ட பட்டியலில் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், கிரண் பொல்லார்டு, சுரேஷ் ரெய்னா,ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் ஓய்வு பெற்றுவிட்டார்கள். மீதம் இருக்கும் வீரர்கள் விளையாடிக்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் கிறிஸ் கெய்ல் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.

READ MORE-தோனி கிட்ட இருந்து இதை தான் எதிர்பார்க்கிறேன்! மனம் திறந்த ரெய்னா!

மேலும் இதுவரை 16 சீசன் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், 17-வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது.