கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவரில் 179 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதலில் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும், […]
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, டி 20-யில் இருந்து விலகிய நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதுகுறித்து அவர், இந்திய அணிக்காக இதுவரை விளையாடியது மிகவும் மகிழ்ச்சி. இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார். முன்னதாக, பிசிசிஐ தேர்வுக்குழுவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அடுத்த கேப்டன் யார் […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய படைகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைந்துள்ளது. நள்ளிரவில் நமது படைகள் துல்லியமாக இலக்கை தாக்கியதாக தெரிவித்த ராஜ்நாத் சிங், ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளன, பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான திட்டமிடல் தான் தாக்குதலை சாத்தியமாக்கியது. அப்பாவி […]
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இருக்கும் கொல்கத்தா ஆகிய அணிகள் இன்றிரவு 7,30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்பொது, சென்னை […]
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல் தெரிவிக்குமாறு தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) புதன்கிழமை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ஆயுதப்படை மே 7 அதிகாலையில் தாக்குதல்களை நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய முக்கிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியது. இந்த […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத மறைவிடங்களை அழித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 15 நாட்களுக்குப் பிறகு இந்தியாவின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்குப் பிறகு […]
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம், மெட்ராஸ் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுக அறக்கட்டளையில் இன்று மாலை 4 மணிக்கு இந்த சிவில் பாதுகாப்பு பயிற்சியை நடத்தியது. போர்க் காலத்தின்போது அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் […]
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்” என்று இந்தியா அறிவித்துள்ளது. கட்சி பாகுபாடின்றி அனைத்து எதிக்கட்சிகளும் இந்திய ராணுவத்தின் இந்த பதிலடிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திய இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி உடன் இந்திய ராணுவத்தின் ‘லெப்டினன்ட் கர்னல்’ சோஃபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ வ்யோமிகா சிங் ஆகிய […]
காஷ்மீர் : ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7, 2025 அன்று அதிகாலை 1:05 மணிக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தியது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் […]
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேகொள்கிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் எல்லைகளைக் கொண்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடனான அவரச ஆலோசனை கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெறும். […]
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பை அணி சார்பாக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய, ரியான் ரிக்கல்டன் 02 ரன்களிலும், ரோஹித் சர்மா 07 […]
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 3,000 மாற்றுக்கட்சியினர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் பேசிய முதல்வர், ”வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் எல்லாம் மக்களிடையே நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது. இன்னும் ஓராண்டில் என்ன திட்டங்களை நிறைவேற்றப்போகிறோம் என்பதை கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. ராக்ல்டன் 2 ரன்கள் எடுத்த பிறகும், ரோஹித் 7 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் வில் ஜாக்ஸ் இணைந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டனர். […]
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி வரை ராணுவ வான்வழிப் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. பயிற்சியின் போது அப்பகுதியில் விமானப் பயணத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விமானிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, குறிப்பாக கட்டுப்பாட்ட கோடு (எல்ஓசி) மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சுற்றியுள்ள பகுதிகள் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்தப் பகுதிகளைச் […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது ஆனால், இந்த IED குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கச்சி மாவட்டத்தின் மாக் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரின் வாகனத்தை ஐஇடி மூலம் குறிவைத்து தாக்கியதாக இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள […]
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பயணித்த ராணுவ வாகனம் கர்னாவின் டீத்வால் பகுதியில் உள்ள ரெயாலா முர்ச்சனா சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்பொழுது, இரண்டு வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், இருவர் காயமடைந்து […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் அந்த அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மும்பைக்கு எதிரான […]
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகத் தயாராகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் பெரிய திரைகளில் வெளியாக இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதைப் பற்றிய ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், வெளியிட்டுள்ளது. ஒரு […]
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள் என்று தெலுங்கானாவின் நம்பள்ளியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இவர் அமைச்சராக இருந்த போது முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரித்து வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த சுரங்க முறைகேடு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டியும் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரெட்டிக்குச் சொந்தமான […]
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் படி, 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விதி 110 இன் கீழ், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவற்றில் ஒன்று, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், […]