திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர் மாவட்டத்தின் கீரங்குடி கிராமத்தில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களுடன் குறுவை சாகுபடி குறித்து உரையாடிய எடப்பாடி பழனிசாமி, அங்கு விவசாயிகளின் தேவைகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, பொதுமக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ”’திருவாரூர் என்று சொன்னாலே, திருவாரூர் தேர் தான் நினைவுக்கு வரும். இந்த பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க இருப்பதாக […]
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அவரை உடல் ரீதியாக தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், பூபாலன், அவரது தந்தை காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தாய் மற்றும் சகோதரி ஆகிய நான்கு பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், பூபாலன் தொடர்புடைய ஒரு ஆடியோ பதிவு வெளியாகி, இந்த […]
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி, மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் கீரன்குடி பகுதியில் விவசாயிகளை சந்தித்தார். அப்பொழுது, வயலில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி நெற்பயிர்களை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த சந்திப்புகளில், விவசாயிகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், குறிப்பாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் போன்றவற்றை அவர் எடுத்துரைத்தார். மேலும், விவசாயிகளின் […]
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, டிஎஸ்பி சுந்தரேசனுக்கு அரசு வழங்கிய பொலிரோ வாகனம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திரும்பப் பெறப்பட்டதாகவும், இதனால் அவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த […]
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் இன்று (ஜூலை 18, 2025) நடைபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்த விழாவில் அணிவகுப்பு மரியாதையை டிஜிபி சங்கர் ஜிவால் ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் பயிற்சி முடித்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் […]
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி எது என்று அவர் பெயரை தெரிவிக்காததால், பல யூகங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக சூசகமாக வெளிப்படுத்தினார். இதனால், அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என தமிழக அரசியல் களத்தில் பல யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பவர்களை […]
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் […]
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மணிகண்டன் (30) கார்த்திக் (25), ஆட்டோ மணிகண்டன் (30), பிரகாஷ் (22), நாராயண மூர்த்தி (30), கார்த்திகேயன் (28), ராகுல் (21) ஆகிய 7 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் […]
சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பங்கு மற்றும் பாஜக தலைமையிலான NDA அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டம் காலை 10:30 மணியளவில் தொடங்கியது. வருகின்ற ஜூலை 21-ம் தேதி அன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் அணுகுமுறையை […]
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார். “தேர்தல் உத்திகளை தற்போது வெளியில் கூற முடியாது,” என்று அவர் கூறினார், இது அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதங்களைத் தூண்டியுள்ளது. மேலும், பாஜகவுடனான கூட்டணியை முறித்து, தவெகவுடன் கைகோர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, “அனுமானமான கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியாது,” என்று […]
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் கவின் குமார், ஜூலை 17, 2025 அன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்த மரணத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டி, மாணவனின் உடலுடன் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது, சிலர் ஆத்திரத்தில் தனியார் […]
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், […]
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மே 2, 2025 அன்று, சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில், மதுரை ஆதீனம் தனது கார் மீது மற்றொரு கார் மோதிய சம்பவத்தை, “தன்னைக் கொலை செய்ய சதி நடந்தது, இதில் பாகிஸ்தான் தொடர்பு இருக்கலாம், குல்லா அணிந்தவர்கள் தாக்க முயன்றனர்,” […]
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது, பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”உங்களது வேளாண் நிலங்களை பறிக்க ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். சிறந்த ஆட்சி தருவதாக ஸ்டாலின் கூறுகிறார், ஆம் அவரது குடும்பத்திற்கு சிறந்த ஆட்சியை தருகிறார். மு.க.ஸ்டாலினால் ஒரு மருத்துவக்கல்லூரியை கூட கொண்டு வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தோம். மயிலாடுதுறை […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார். இந்தக் கோரிக்கைக்கு முக்கிய காரணம், தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாகவும், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருந்ததால், தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனது எக்ஸ் தள […]
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி (CBCID) விசாரணையில் பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதியாகியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் ரூ.4 கோடி கோடி பணம் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் […]
சென்னை : கீழடி அகழாய்வு அறிக்கையில் சிலவற்றிற்கு மத்திய தொல்லியல் துறை விளக்கம் கோரி இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு முறையல்ல, அடுத்தடுத்த கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அப்போதைய அகழாய்வு இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அதில், “கிமு 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நாகரிகத்தை கிமு 3ம் நூற்றாண்டு என மாற்றச் சொல்வது குற்றம் […]
சென்னை : திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, சமீபத்தில் சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக திருச்சி சிவா பேசுகையில், “காமராஜரருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக திமுக ஆட்சிக் காலத்தில், அவர் தங்குகிற எல்லா பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டதாக கலைஞர் கருணாநிதி என்னிடம் சொன்னார். கருணாநிதியின் கையைப் பிடித்து, நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற […]