வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், சாதூர்யமாகவும், புத்திசாலித்தனமாகவும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட இருநாடுகளுக்கும் வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், ”அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொது […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான தாக்குதலாக தொடர்கிறது. இந்த விரிசலின் தொடக்கத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக கூறியது. இதனால் சிந்து நதியின் ஒரு பகுதியான செனாப் நதி குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் தண்ணீர் திறப்பு முழுதாக நிறுத்திவைக்கப்பட்டது. வனவிலங்குகளுக்கு மட்டும் ஒரு மதகு திறந்துவிட்டு மீதம் உள்ள […]
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து வாங்கிய அதிநவீன ரேடார் அமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) எனும் கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. நீண்ட வருடங்களாக பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரயில் கடத்தல், பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் என தாக்குதல் நடத்தி வந்த BLA அமைப்பு நேற்று நடத்திய 2 தாக்குதல்களில் […]
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலானது காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகள் முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், பாகிஸ்தான் ராணுவம் […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் 70 முதல் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதிலும், பஹாவல்பூரில் நடந்த […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலானது பயங்கரவாதிகள் இருப்பிடங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் மக்கள் மீதோ, ராணுவம் மீதோ இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது ஆனால், இந்த IED குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. கச்சி மாவட்டத்தின் மாக் பகுதியில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரின் வாகனத்தை ஐஇடி மூலம் குறிவைத்து தாக்கியதாக இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள […]
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார். கடந்த ஏப்ரல் 29 அன்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், தாக்குதலுக்கு எப்படி, எப்போது, எங்கு பதிலளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு “முழு சுதந்திரம்” இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்தியாவுடன் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், க பாகிஸ்தான் இன்று மீண்டும் ஏவுகணை […]
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி 14மணி நேரம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருந்தார். முன்னதாக, அக்டோபர் 2019 இல், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய 7 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பின் […]
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்,”இத்தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது, பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாகவும்” […]
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத அமைப்பான TRF எனும் அமைப்பு நடத்தியதாக பொறுப்பேற்றது என்றும், இது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இயக்கம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகமாகியுள்ள நிலையில், தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை இந்தியா, பாகிஸ்தான் இணைந்து கண்டறிய வேண்டும் […]
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும்தங்கள் படைகளை தயார் படுத்தும் முனைப்பில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தான் அரசும் அந்நாட்டு ராணுவத்தை […]
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, “நானே போபாக இருக்க விரும்புகிறேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், போப்பாண்டவர் உடையில் தலை முதல் கால் வரை அணிந்திருக்கும் AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படம் கவனம் ஈர்த்துள்ளது. View this post on Instagram A post shared by President Donald J. Trump (@realdonaldtrump) […]
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றமானது அதிகரித்து உள்ளது. இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக பாகிஸ்தான் உள்ளது என்ற குற்றசாட்டை இந்தியா முன்வைத்து வருகிறது. இரு நாடுகளும் தங்கள் வான்வழியை பயன்படுத்த எதிரெதிர் நாடுகளுக்கு தடை விதித்துள்ளன. அதேபோல தூதரக உறவுகள், வணிகள் உறவுகள், விசா ஆகியவை […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன் வரிசையில், சிந்து நதியின் நீர் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தானும் விசாக்களை ரத்து செய்வது உட்பட இப்படி இந்தியா கடினமான முடிவுகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முப்படை அதிகாரிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். […]
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்து உள்ளது. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பதம்பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார். அதன் பிறகு ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் குறித்த தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில்,”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன், […]
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு முடிந்தவுடனேவாக்கு எண்ணிக்கையும் உடனடியாக தொடங்கிவிடும். 343-ல் 172 தொகுதிகளை வென்று இருந்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றலாம். கனடாவில் 2015 முதலே லிபரல் கட்சி தான் ஆட்சியில் இருந்து வருகிறது. பல்வேறு அரசியல் மாற்றத்தை அடுத்து கடந்த 2024 டிசம்பரில் அப்போதைய பிரதமர் ட்ரூடோராஜினாமா செய்ய, அதன் பிறகு லிபரல் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மார்க் […]
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District) ஒரு உணவகமான சுனியாங் உணவகத்தில் (Chuniang Restaurant) மதியம் 12:25 மணிக்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தீ மிக வேகமாகப் பரவியதால், உணவகத்தில் இருந்தவர்களால் தப்பிக்க முடியவில்லை. மேலும், தீ பிடித்த இந்த […]
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கரே தொய்பயன் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக இந்திய அதிகாரிகள் […]