சென்னை : கோவையில் நடைபெற்ற தொழிலதிபர்கள் நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன், வெவ்வேறு உணவு பொருட்களின் மீது வெவ்வேறு ஜி.எஸ்.டி வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது எனக்கூறி அதனை முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து , இன்று காலையில் கோவை நட்சத்திர ஹோட்டலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் , அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியானது. […]
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கோவையை சேர்ந்த அன்னபூர்ணா சீனிவாசன் எனும் ஹோட்டல் அதிபர் ஜி.எஸ்.டி குறித்து தனது கோரிக்கையை வெளிப்படையாக கேட்டது, அதன்பிறகு இன்று அன்னபூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோக்கள் ஆகியவை வெளியாகி தற்போது தமிழக அரசியல் முதல் இந்திய அரசியல் வரையில் பேசுபொருளாக மாறியுள்ளது. கோவையில் நடைபெற்ற சிறுகுறு மற்றும் ஹோட்டல் அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா சீனிவாசன் கேள்வி எழுப்பியதால், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட […]
சென்னை : சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் (செப்டம்பர் 12, 2024) இரவு மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திமுக அரசுப் பொறுப்பேற்ற கடந்த 40 மாதங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக சென்னை […]
சென்னை : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையில் முழுவதுமாக பல இடங்களில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது . திடீரென நேற்று நள்ளிரவு மின்தடை சென்னை முழுவதும் ஏற்பட்டதன் காரணமாக, மக்கள் மின்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இரட்டை மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது எனவும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது எனவும் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டார். அடுத்த நாள் ஆகஸ்ட் 28இல் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க, தங்கள் தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார் […]
மதுரை : தமிழகத்தில் குட்கா , கூல் லிப் போன்ற போதை பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தாலும், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இந்த போதை வஸ்துக்கள் சகஜமாக கிடைக்கும் நிலையிலேயே உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தடுத்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கைது, வழக்குபதிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இந்த போதை வஸ்துக்களின் பயன்பாடு முற்றிலும் அழிந்தபாடில்லை. இதனைக் குறிப்பிட்டு, இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை கருத்தை பதிவிட்டார். குட்கா […]
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இம்மாதம் 22ம் தேதி நடக்கலாம் எனக் கூறிய நிலையில், 23ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், குறுகிய காலமாக இருப்பதால் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்த தகவலை விஜய் இன்று அறிவிப்பார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 23இல் மாநாடு […]
கோவை : நேற்று கோவையில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்ற வணிகர்கள் என பலர் கலந்து கொண்ட தொழில்துறை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் , ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் ஜி.எஸ்.டி வரி பற்றி கலகலப்பாக கோரிக்கை வைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த […]
மதுரை : மதுரை மாவட்டம் கட்டாரபாளைம் பகுதியில் விசாகா என்கிற பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. விடுதியில் இன்று அதிகாலை குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரரக்ள் தீயை அணைத்தனர். முதற்கட்ட தகவலின்படி, பிரீட்ஜ் வெடித்து அதில் உள்ள சிலிண்டர் மூலமாக வெளியேறிய நச்சுப் புகையால் 5 பேர் மயங்கி விழுந்தனர். அதில், சரண்யா, பரிமளா ஆகிய […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி வருகின்றன. ஏற்கனவே, ஜபில் (Jabil) எலெக்ட்ரானிக் நிறுவனம் திருச்சியில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீடு செய்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிகாகோவில் வைத்து கையெழுத்தாகின. அதே போல, சான் […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 13.09.2024) வெள்ளிக் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக தேனி மாவட்டத்தில் கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்தபகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! தேனி வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆன்மீகம், முன்ஜென்மம் பற்றியும், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்துக்களையும் மகா விஷ்ணு என்பவர் பேசியிருந்தார். இதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் மகா விஷ்ணு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் மகா விஷ்ணு மீது புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பெயரில் மகா விஷ்ணுவை கடந்த 7ஆம் தேதி சென்னை விமான […]
கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி தொகுதி ராமத்தொட்டி பகுதியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த அரசு நிகழ்வில் அத்தொகுதி எம்.எல்.ஏ கே.பி முனுசாமி கலந்துகொள்ள வந்திருந்தார். ஆனால் , அங்கிருந்த திமுகவினர் இந்த அரசு நிகழ்வில் கே.பி.முனுசாமி பங்கேற்க கூடாது, இது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு திமுகவினர் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினர் எதிர்ப்பை […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 13.09.2024) வெள்ளிக் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! கோவை இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ் சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி […]
ராமநாதபுரம் : 1924ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1957, செப்டம்பர் 11இல் படுகொலை செய்யப்பட்டார். அவர் இறந்த நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று ஆண்டுதோறும் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு இன்று அரசியல் தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்துகின்றனர். இம்மானுவேல் சேகரனார் நினைவுதினம் […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஆந்திராவைச் சேர்ந்த தனியார் அமைப்பும் இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகின்றன. இந்த கார் பந்தயம் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது டிசம்பர் மாத கனமழை காரணமாக போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், ஒருவழியாக, இதன் இரண்டாம் போட்டிகள் (ஆகஸ்ட் 31) மற்றும் நேற்று (செப்டம்பர் 1) ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வு உலகளவில் கவனம் ஈர்த்தது. சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 […]
கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி முனுசாமி, இன்று தனது தொகுதிக்குட்பட்ட சூளகிரி வட்டம் காமன்தொட்டி பகுதியில் மக்கள் நல திட்டத்தை தொடங்கி வைக்க சென்றிருந்தார். அங்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த திமுகவினர் கே.பி.முனுசாமி திட்டத்தை தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அங்குள்ள அதிமுகவினர், திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 12.09.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! கோவை பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம். சர்க்கார்சமகுளம், […]
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், ” வரும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று விடுதலை சிறுத்தைகள் மகளிர் அமைப்பு சார்பாக மதுஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.”என அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் கள்ளசாராயத்தால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,589ஆக உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினரை […]