சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதன்படி, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. […]
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத நீர் தேக்கத்தின் காரணமாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில், டெங்கு பாதிப்பு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கடலூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அவர் இது குறித்து பேசுகையில், “பருவமழை காலங்களில் காய்ச்சல் பரவுவது இயல்புதான்.த மிழ்நாட்டில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் […]
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு உண்டு என அறிவித்திருந்ததற்கு ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஒரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார். இன்று சோளிங்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி கண்டிப்பாக […]
சென்னை : சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக தற்கால அரசியல் சூழலுக்கு ஏற்ற கருத்துக்களை பதிவிட்டு வருவது வழக்கம். சில சமயம் நேரடியாக தனது கருத்துக்களை கூறுவார். சில சமயம் மறைமுகமாக தனது கருத்துக்களை கூறுவார். அப்படி தான், அவர் கடந்த 3ஆம் தேதி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து, பாமக கூட்டணி குறித்த கேள்விகளை பலமாக எழுப்பியது. பாஜகவுடன் கூட்டணி […]
சென்னை : எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இரு சக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) வாங்க ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல இயலும். மாநிலம் […]
திருப்பத்தூர் : சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சில நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்து செய்தியாளர் […]
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) பயின்று வருகிறார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல், அறிவியல் குறித்த புத்தாய்வுப் படிப்பில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், லண்டனில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தாயகம் திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நவ. 29இல் சென்னை பாஜக […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (08/11/2024) வெள்ளிக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். தருமபுரி லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கடாம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எர்ரப்பட்டி, நல்லசேனஹள்ளி, பழையதனூர், மாதமங்கலம் கோவை இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]
தஞ்சை : 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தலைமை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 5 பேர் கொண்ட தேர்தல் கண்காணிப்பு குழு, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தஞ்சையில் திமுக தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2026 தேர்தல் பற்றியும், திமுக கூட்டணி பற்றியும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “திமுகவை அழிக்க வேண்டும் என சில நினைக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பதில் சொல்ல […]
மதுரை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் இன்னும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது. அவர் கூறிய ஆட்சி, அதிகாரத்தில் பங்கு , கூட்டணி ஆட்சி என்ற கூற்றுக்களுக்கு தற்போதும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக கட்சித் தலைவர் விஜய் […]
சென்னை : தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதை விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். தற்போது, போதையில்லா தமிழ்நாடு என்ற தமிழக அரசின் நோக்கத்தை செல்போன் வாயிலாக பலருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அதற்கான போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, “போதையில்லா தமிழ்நாடு” எனும் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மீம்ஸ், […]
சென்னை : கந்தசஷ்டி திருவிழாவின் விரத முறைகள், சிறப்பு பூஜைகள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி முருகன் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் யாக சாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இந்த கந்தசஷ்டியின் 6ஆம் நாளான இன்று (நவம்பர் 7) உச்சநிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் , சூரனை , கடவுள் முருகன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். இதனை காண […]
சென்னை : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு களைகட்டி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைபோல குவிந்துள்ளனர். சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதை தொடர்ந்து 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறும்.
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு வருவதால். இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், நவ-9 முதல் 12 வரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் , விசிக எம்பி திருமாவளவன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “2024 – 2025ஆம் ஆண்டுக்கான திட்ட வளர்ச்சி குறித்த முதல் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (07/11/2024) வியாழக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் கரூர் புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள். […]
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை அனுப்பர்பாளையத்தில் பல்லகல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தோடு சேர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், ஐடி பூங்கா , விமான நிலைய விரிவாக்கம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதில் அடங்கும். […]
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை 4 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த சூரா சம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இப்பொழுதே கோவிலில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என […]