சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கண்ணியத்துடன் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டை பழிவாங்குகிறது மத்திய அரசு. அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி என நிலையான வளர்ச்சியில் சாம்பியன்கள் ஆனாலும், நமக்கு […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், அவர் இந்தப் பிரச்சினை குறித்து தெளிவான முறையில் பதிலளித்துள்ளார். 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 போட்டித்தேர்வு, நாளை (ஜூலை 12) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை 22 லட்சத்துக்கும் […]
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ”படத்தில் தனக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காததால், லோகேஷ் மீது அதிருப்தி அடைந்ததை நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். சென்னையில் துருவா சர்ஜா தலைமையில் நடைபெற்ற நட்சத்திரங்கள் நிறைந்த கே.டி – தி டெவில் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஜித் உடனான தனது உறவையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் […]
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ““என் வீட்டில், நான் உட்காரும் இடம் அருகேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளது. சாதாரணமானது அல்ல.. மிகவும் விலை உயர்ந்த கருவி, நேற்று முன்தினம் ஒட்டு கேட்கும் கருவி இருந்ததைக் கண்டறிந்து […]
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் மரணச் செய்தி செய்திகளில் வந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆஷா போஸ்லேவின் மரணச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது, அதைத் தொடர்ந்து அவரது மகன் இந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக, இ டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய அவர், “இந்தச் செய்தி தவறானது. அம்மா முற்றிலும் நலமாக இருக்கிறார்” […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வருகின்ற 15-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது போக, 16-07-2025 மற்றும் 17-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை […]
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் […]
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மதுரை மாநகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரி குறைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், ”சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு […]
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றும் (ஜூலை 9) இன்றும் (ஜூலை 10) இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்றைய தினம் முதலமைச்சர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு பயணித்து, அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் தொடங்கி, தூர்காலயா ரோடு, தெப்பக்குளம் தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக 5 கி.மீ. […]
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏமனில் கொலை வழக்கில் நிமிஷாவுக்கு வரும் 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த மனு மீது நாளை (ஜூலை 11] விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளன. நிமிஷா பிரியா, 2017இல் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, தனி விமானம் மூலம் இன்று (ஜூலை 10) காலை டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர். இந்த பயணத்தின்போது, இந்தியா உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரேசிலின் […]
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர் ராஜா (வயது 48), 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், கோவை நகர காவல்துறையால் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். 1998 பிப்ரவரி 14 அன்று நடந்த இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராஜா, தையல் தொழிலாளியாகவும், எம்பிராய்டரி வேலை செய்பவராகவும் இருந்தவர், குண்டுவெடிப்புக்கு முன் வெடிகுண்டுகளை தயாரித்து […]
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அறநிலையத்துறையை விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் பயில்கின்றனர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 […]
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ”கோவில் நிதியில் இருந்து கல்லூரி கட்டுகிறார்களாம். கோவிலின் முன்னேற்றத்திற்காக பொதுமக்களாகிய நீங்கள் நிதி கொடுத்தால், அதை வைத்து, இவர்கள் சம்பாதிப்பதற்காக கல்லூரிகள் அமைக்கிறார்களாம். ஏன் அரசாங்க நிதியை வைத்து கட்ட முடியாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயில்கள் நிதியில் கல்வி […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர், 2022இல் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார், மேலும் 2026 வரை […]
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும், ஒரு கிளினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால், அவர்களின் அடையாளங்கள் அல்லது மேலும் தனிப்பட்ட விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த வாகனங்கள் இரண்டும் கனரக வாகனங்கள் என்பதால், மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. இந்நிலையில், […]
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, அரசு […]
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார். நமீபிய தலைநகர் விண்டோக்-கில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார் 5 நாடுகள் பயணத்தின் நமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று அந்நாட்டு அதிபருடன் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபர் நெடும்போ நந்தி – நதைத்வா முன்னிலையில், இந்தியா – நமீபியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. […]
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே கேட்டுகளில் பொதுமக்கள் அழுத்தத்தால் மோதல் […]
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி இன்று முதல் தொடங்குகிறது. தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இந்தப் போட்டி வரலாற்று சிறப்புமிக்க லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம், ஷுப்மான் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ஆம், கடந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்தை […]